உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

காளியம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு, பெண்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போன்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்ரகாளியம்மன், கருப்பன் சுவாமி கோயிலில், நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !