திருவண்ணாமலை தீப உற்சவம் 2ம் நாள்: பராசக்தி அம்மன் தெப்பத்தில் பவானி
ADDED :1085 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இரண்டாவது நாள் தெப்ப உற்சவத்தில், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீபத்தை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் காலை முதல், விடிய விடிய கிரிவலம் சென்று, மஹா தீப தரிசனம் செய்து வழிபட்டனர். தீபத் திருவிழா நிறைவு 2ம் நாள் உற்சவத்தில், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.