வித்யா கணபதி வருஷாபிஷேகம்
ADDED :1131 days ago
பரமக்குடி: பரமக்குடி வ.உ.சி., மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதிக்கு வருஷாபிஷேக விழா நடந்தது.
பரமக்குடி மஞ்சள் பட்டினம் வ.உ.சி., மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அருள்பாலிக்கும் விதியா கணபதிக்கு கடந்த ஆண்டு 2 கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிலையில் மண்டல அபிஷேக காலங்கள் நிறைவடைந்து, நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோயில் முன்பு சிறப்பு ஹோமங்கள் நடந்து, விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் வித்யா கணபதிக்கு மகாதீபாராதனைகள் நடந்தன. விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.