குமாரபாளையம் வலம்புரி விநாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :1361 days ago
சூலூர்: குமாரபாளையம் வலம்புரி விநாயகர் கோவில் ஆண்டு விழா நேற்று நடந்தது. சூலூர் அடுத்த குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகில், ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பல திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தீபாராதனை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகப்பெருமான் அருள் பாலித்தார். பூஜை முடித்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.