நாககன்னி அம்பாள் கோயிலில் மண்டல பூஜை
ADDED :1110 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி நாககன்னி அம்பாள் கோயில் 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம், ஆராதனைகள், கூட்டு வழிபாடு செய்தனர். சீர்பாதம் தாங்கிகள், ஐயப்ப சுவாமிமார்கள் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.