உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலிநாகம்மா கோயிலில் வருஷாபிஷேகம்

வேலிநாகம்மா கோயிலில் வருஷாபிஷேகம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகரில் அருள் பாலிக்கும் வேலி நாகம்மா கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.

பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நிறைவடைந்து மண்டல பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு ஹோமங்களுடன், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் நாகம்மா மஞ்சள் காப்பு சாற்றி, மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அப்போது தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. வேலி நாகம்மனுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி பவுர்ணமி நாளில் களரி விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !