அம்மா கோயிலில் மூர்த்தக்கால் நடும் விழா
ADDED :1063 days ago
பேரையூர்: பேரையூர் அருகே டி குன்னத்தூர் அம்மா கோயிலில் வரும் பிப்.23ஆம் தேதி 51 ஏழை மணமக்களின் சமத்துவ சமுதாய திருமணத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைக்கிறார். இந்த திருமணத்திற்கான முகூர்த்த கால் அமைக்கும் பணி அம்மா கோயிலில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முகூர்த்த கால் பந்தலை வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ராஜேந்திர பாலாஜி, கழக அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன் ராஜன் செல்லப்பா,எஸ்.டி.கே ஜக்கையன், வெற்றிவேல் நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கரன்,பாவடையான் கலந்து கொண்டனர்.