ராமகிருஷ்ண மடத்தில் அன்னை சாரதாதேவியின் 170 வது ஜெயந்தி விழா
ADDED :1038 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அன்னைக்கும் சிறப்பு பூஜை, கோவில் வலம், ஹோமம், புஷ்பாஞ்சலி, பிரசாதம், திருமதி பிரியதர்ஷினியின் பக்திப் பாடல்கள், நகர மற்றும் கிராம மையத்தில் குங்கும அர்ச்சனைகள், திரு நடராஜன் ஷியாம் சுந்தரின் அன்னை மீதான உபன்யாசம் ஆகியவை இன்று சிறப்பாக நடைபெற்றன. முத்தாய்ப்பாக, மடத்தின் அருகில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியான ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா அரசு உதவி பெறும் ஆரம்ப நிலைப் பள்ளி குழந்தைகளுடன் அன்னையின் ஜெயந்தியைக் கொண்டாடப்பட்டது.