மேலுார் சிவன் கோயிலில் அஷ்டமி சப்ர விழா
ADDED :1186 days ago
மேலுார்: திருவிளையாடல் புராணத்தில் உலகில் உள்ள ஜீவராசிகளுக்கு இறைவன் படியளந்த நாளை அஷ்டமி சப்ர விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை முன்னிட்டு மேலுார் சிவன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன்,வள்ளி, தெய்வானை மயில் வாகனத்திலும், சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், சன்டிகேஷ்வரர் கேடகத்திலும் எழுந்தருளினர். அதற்கு முன்பாக சிவன் கோயிலில் சிவாச்சரியார்கள் தட்சினாமூர்த்தி, ராஜா தலைமையில் அபிசேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.