உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் 169 வது ஜெயந்தி விழா
ADDED :1038 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ சாரதா தேவியின் 169 வது ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ சாரதா தேவியின் 169 வது ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீசாரதா தேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரத உற்சவ நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. 108 மந்திரம்ங்கள் முழங்க அர்ச்சனை செய்யப்பட்டது. ஆசிரம சகோதரி யத்தீஸ்வரி அமய ப்ரியா அம்பா சொற்பொழிவாற்றினார். இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.