உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சீர்வரிசை

திருச்சி: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று 16.12.2022 வெள்ளிக்கிழமை தனுர் மாதம் (மார்கழி - 1) பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தன் சகோதரியான திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பட்டுப்புடவை, தங்க மாங்கல்யம்  மற்றும் மங்கலப் பொருட்களை  சீர் கொடுக்கும் வைபவம் நேற்று 15ம் தேதி ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து  அவர்கள் தலைமையில் , கோயில் துணை மேலாளர் திருதி.சண்முகவடிவு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்  திருவானைக்கோயில் மேலாளர்எஸ் . ஜெகதீஸ்வரியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !