பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம்
ADDED :1106 days ago
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்து வேண்டிக் கொண்டதுடன் மகா தேவ அஷ்டமி அன்னாபிஷேகத்தை கொண்டாடினர்.
ராஜபாளையம் முடங்கியார் ரோடு அக்ரஹாரம் தெருவில் ருக்மணி சத்ய பாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. மகா தேவ அஷ்டமி, மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யும்போது புத்திர பாக்கியம், திருமண தடை, வியாபார விருத்தி உண்டாகும் என்ற நம்பிக்கையை முன்னிட்டு ஆண்கள் பெண்கள் வித்தியாசம் இன்றி பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.