ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை
ADDED :1031 days ago
ராஜபாளையம், ராஜபாளையம் சஞ்சீவி மலையில் படி பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 365 படிகள் அமைக்கப்பட்டு மலை உச்சியில் குமாரசாமி கோயில் வழிபாடு நடைபெறுகிறது. ராஜபாளையம் சக்கராஜா கோட்டை சார்பில் நேற்று படி பூஜை விழா நடத்தப்பட்டது. முத்துராமலிங்கம் பஜனை குழுவினர் பாடல்களுடன் ஊர்வலமாக வந்து 365 படிகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தி ஒவ்வொரு படியாக கற்பூரம் ஏற்றி மலை உச்சியில் உள்ள குமாரசாமி கோயில் சென்று அடைந்தனர்.