சீர்காழியில் ராதா கல்யாண மகோத்ஸவம்
மயிலாடுதுறை: சீர்காழிகள் நடைபெற்ற ராதா கல்யாண மகோத்ஸவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோவிலில் இன்று ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு அநுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜை தோடயமங்களம், குரு கீர்த்தனை மற்றும் அஷ்டபதியுடன் தொடங்கியது. மாலை 4 மணிக்கு அஷ்டபதி தொடர்ச்சி, 7:30 மணிக்கு பஞ்சபதி, தியானம், பூஜை மற்றும் டோலோத்ஸவம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு உஞ்சவ்ருத்தி, 9:30 மணிக்கு சம்பிரதாய திவ்யநாமம், 11 :45 மணி முதல் 1 மணிக்குள் மாங்கல்ய தாரணம், ஆஞ்சநேய உற்சவம் நடைபெற்றது. ராதா கல்யாண மகோத்ஸவத்தை தேப்பெருமாநல்லூர் நரசிம்மன் பாகவதர் குழுவினர் நடத்தி வைத்தனர். நிகழ்வில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சீனிவாசனுக்கு நினைவு பரிசினை வழங்கி வாழ்த்தினார். ராதா கல்யாண மகோத்சவத்திற்கான ஏற்பாடுகளை சீர்காழி தென்பாதி ஆத்யந்த பிரபு ஆசிரமம் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் இணைந்து செய்துள்ளனர்.