சக்தி குமரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED :1030 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் சக்தி குமரன் செந்திலாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சொர்ண ஆகாசன பைரவர் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமி தினத்தை ஒட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பைரவர் சர்வ அலங்காரத்துடன், எலுமிச்சை மற்றும் வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர். தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.