உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார் பட்டியில் பக்தர்களை கவரும் தினசரி காலண்டர்

பிள்ளையார் பட்டியில் பக்தர்களை கவரும் தினசரி காலண்டர்

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஆர்வமாக வாங்கிச் செல்லும் பொருட்களில் ‛தினசரி காலண்டரும்’ ஓன்றாகி விட்டது.

நகரத்தாரின் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு கடந்த 30 ஆண்டுகளாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோயிலை உலகெங்கும் கொண்டு சென்றதற்கு மூல காரணம் ‛மூலவரின்’ போட்டோ என்றால் மிகையாகாது. தற்போது அதற்கு இணையாக இக்கோயிலின் ‛ தினசரி காலண்டரும்’ இடம் பெற்றுள்ளது. கோயில் கடையில் விநாயகர் படங்கள், டாலர்கள், பைகள்,ஸ்டிக்கர்கள் இவற்றுடன் காலண்டர் விற்பனை நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கே காலண்டர் விற்பனை துவங்கி விடுகிறது. பக்தர்கள்  தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கு பரிசாக வழங்கவும் இக்காலண்டர்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது வெளிக்கடைகளிலும் காலண்டர் விற்பனை நடக்கிறது. வியாபாரி மனோன்மணி கூறுகையில்,‛ பக்தர்கள் ஆர்வமாக காலண்டரை வாங்குகின்றனர். ரூ 75 முதல் ரூ 550 வரை விலையுள்ள பல வகைக் காலண்டர்கள் விற்கிறோம். மூன்று மாதம் இந்த வியாபாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !