அன்னை சாரதா தேவியார் ஜெயந்தி விழா
ADDED :1035 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில், அன்னை சாரதா தேவியார், 170 வது ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி, காலை மங்கள ஆராத்தி நடந்தது. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் வித்யாலயா குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பக்தர்கள் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, மகா ஹோமம் ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சியில், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மாலை பெண்கள் பங்கேற்ற சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. விழாவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.