பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி
ADDED :1036 days ago
அவிநாசி: அவிநாசி அடுத்த சேவூரில் எழுந்தருளியுள்ள பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப டிரஸ்ட் பக்தர்கள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. முன்னதாக, அஷ்டாபிஷேகம் நடைபெற்று, பலவகை மலர்கள் கொண்டு ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.அதன் பின்னர் கூட்டு பஜனை ஸ்ரீ சபரி கிரீஸா ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்றது.புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா டிரஸ்ட் குருசாமி ஈஸ்வரமூர்த்தி செய்திருந்தார்.மேலும் ஆடிட்டர் நாகராஜ், குருசாமிகள் கணேஷ், மணி உள்ளிட்ட 300ம் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐயப்பன் அருள் பெற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.