காரமடை அரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி வைபவம்
ADDED :1102 days ago
மேட்டுப்பாளையம்: மார்கழி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதிசி முன்னிட்டு காரமடையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெற்று வருகிறது. ஒரு ஆண்டில் வரும், 25 ஏகாதசிகளில், கார்த்திகை மாதத்தில் வளர்பிறை கைசிக ஏகாதசி வைபவம் மிகச் சிறந்ததாகும். இன்று மார்கழி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, கோவில் நடை திறந்து , மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்தளத்தார் அர்ச்சகர்கள் பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.