உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் டிச., 23 ல் அனுமன் ஜெயந்தி விழா

பரமக்குடியில் டிச., 23 ல் அனுமன் ஜெயந்தி விழா

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனுமன் கோயில்களில் டிச., 23 அன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் டிச., 22 காலை 5:00 மணி முதல் மூலவர் மற்றும் உற்சவருக்கு 13 வகையான விசேஷ அபிஷேகம் நடக்க உள்ளது. இன்று மாலை 5 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் வீதி உலா வர உள்ளார்.

டிச., 23 காலை அமாவாசை பூஜை, மற்றும் 6:00 மணி தொடங்கி அனுக்கை, கலச ஸ்தாபனம், ஹோமம், பூர்ணாகுதி நிறைவடைந்து, 10:00 மணிக்கு 108 கலச அபிஷேகம் நடக்க உள்ளது.

தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு வடை மாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

*பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி நேற்று மாலை 6:00 மணிக்கு அனுமன் ஜெயந்தி விழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையும், வரும் நான்கு நாட்களும் காலையில் அபிஷேகம் மற்றும் மாலையில் பக்தி உலா நடக்கிறது. டிச., 23 அனுமன் ஜெயந்தி நாளில் காலை தொடங்கி இரவு வரை பக்தர்கள் 11, 108, 1008 என கோயில் சுற்றி வந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

*இதேபோல் காக்கா தோப்பு வீர ஆஞ்சநேயர், எமனேஸ்வரம் அனுமன் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !