பாலசாஸ்தா கோயிலில் திருவிழா கோலாகலம்
ADDED :1033 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் மார்கழி திருவிழா கோலாகலம். மெகா அன்னதானம் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 4 ம்தேதி கோயில் முழுவதும் மலர்களால் அணிவித்து, சரணகோஷம் பாடியும், ஐயப்பன் பாடல்கள் இசை கச்சேரியும், மெகா அன்னதானம் மார்கழி திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பனுக்கு அர்ச்சகர் பிரசன்னா சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தார். யானை வாகனத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். காலையில் இருந்து மாலை வரை அன்னதானத்தில் பல ஆயிரக்கணக்கானோர் சாப்பிட்டனர். ஏற்பாடுகளை ஐயப்பசேவா டிரஸ்ட் மற்றும் பாலசாஸ்தா திருப்பணிக் குழுவினர்கள் செய்திருந்தனர்.