கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் புனரமைப்பு பணிகள் துவக்கம்
ADDED :1347 days ago
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் டிசம்பர் 2ல் நடந்தது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக உபயதாரர்கள் மூலம் கோயில் கோபுரத்திற்கு பெயின்டிங் செய்வதற்கான பணிகள் துவங்கி உள்ளது. தொடர்ந்து ரூ.26 லட்சம் மதிப்பில் உபயதாரர்கள் மூலம் கோயில் சுற்றுப்புற காலத்தில் கல் பதித்தல், பழமை மாறாமல் சுவர்களை சுத்தம் செய்தல், தட்டு ஓடு பதித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், சித்திரை திருவிழாவுக்கு முன் கோயில் கும்பாபிஷேகத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.