உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரத்தில் சிலைகள் செய்யும் பணி

 வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரத்தில் சிலைகள் செய்யும் பணி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரத்தில், சுதைகள் என்று அழைக்கப்படும் சிலைகள் செய்யும் பணிகளும், கருவறை முன் மகா மண்டபம் கட்டும் பணிகளும் நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவில் முன்பு,101 அடி உயரம் உள்ள, ஏழு நிலை ராஜகோபுரம், கட்டும் திருப்பணிகள் நடைபெறுகின்றன.இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது ராஜகோபுரம் இரண்டாம் நிலையில், சுதைகள் செய்யும் பணிகளும், ஆறாவது நிலையில் பூச்சு வேலைகளும்‌ நடைபெறுகின்றன. மேலும் கோவில் கருவறை முன், மகா மண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. கொடிமரம் முன் வசந்த மண்டபமும், ஆற்றின் கரையோரம் முத்தமிழ் விநாயகருக்கு புதிய சன்னதி ஆகியவை கட்டும் பணிகள் துவங்க உள்ளன. மகா மண்டபம், 43க்கு 43 அடியிலும், வசந்த மண்டபம் 60க்கு 80 அடியிலும் கட்டப்பட உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !