உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்திருவிழா வரும் 27ல் துவக்கம்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்திருவிழா வரும் 27ல் துவக்கம்

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர் திருவிழா வரும் 27ம் தேதி துவங்குகிறது. மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.


இக்கோவிலில் 23ம் ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 27ம் தேதி காலை கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. சின்ன அம்மன், பெரிய அம்மன் கோவிலில் அபிஷேகம் நடக்கிறது. இரவு கிராம சாந்தி நடக்கிறது. 28ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றமும், இதையடுத்து கயிலை வாத்தியத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் 29ம் தேதி காலையில் சூரிய வாகனத்திலும், மாலையில் சந்திர வாகனத்திலும், 30ம் தேதி மாலை பூத வாகனத்திலும், 31ம் தேதி மாலை புஷ்ப பல்லக்கிலும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. வரும் ஜன. 1ம் தேதி மாலையில் பஞ்ச மூர்த்திகள் உலாவும், 2ம் தேதி காலை சுவாமி திருக்கல்யாண உற்சவமும், மாலையில் யானை வாகனத்தில் சுவாமி உலாவும் நடக்கிறது. வருகிற 3ம் தேதி காலை 8:00 மணிக்கு அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது, மாலையில் கும்மி நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !