உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு  மாலை நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி அபிஷேகம்  அலங்காரம் ஆராதனை தீபாராதனை  நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று  முறைவலம்  வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் பூஜை நிறைவு பெற்றது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !