பரமக்குடியில் மார்கழி பஜனை கோலாகலம்
ADDED :1029 days ago
பரமக்குடி: பரமக்குடியில் மார்கழி மாதம் துவங்கி, தினமும் பாகவதர் கோஷ்டியினரின் பஜனை காலையில் கோலாகலமாக நடந்து வருகிறது. மாதங்களில் மார்கழி என்பதற்கு ஏற்ப, அனைத்து சிவன், பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடப்படுவது வழக்கம். இதன்படி டிச., 16 மார்கழி மாதம் துவங்கிய நாள் முதல், பரமக்குடியில் பாகவதர்கள் பஜனை பாடல்களை பாடி கோயில் மற்றும் வீதிகளில் வலம் வருகின்றனர்.