/
கோயில்கள் செய்திகள் / செல்லும்வழி நல்வழியாக.. சகல சவுபாக்கியங்களும் பெற.. அஞ்சனை மைந்தனை வணங்குவோம்
செல்லும்வழி நல்வழியாக.. சகல சவுபாக்கியங்களும் பெற.. அஞ்சனை மைந்தனை வணங்குவோம்
ADDED :1096 days ago
அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவனும்; ஐம்புலன்களை வென்றவனும், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவனும், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவர் என்று அனுமனைப் போற்றுகிறார் கவிச்சக்கரவர்த்தியான கம்பர்.
அஞ்சனை மைந்தா போற்றி! அஞ்சினை வென்றாய் போற்றி!
வெஞ்சினக் கதிர்பின் சென்று முழுமறை யுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி!
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி!
அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல் என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன். நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் இவர், இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கிறார். அவரை வணங்குவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.