முத்தாலம்மன் திருவிழா அக். 14ல் துவக்கம்
ADDED :4799 days ago
தாடிக்கொம்பு: அகரம் முத்தாலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபரில் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவிற்காக உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நந்தது. பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உத்தரவு கிடைக்கவே, அக்., 14ல் சாட்டுதலுடன் திருவிழா துவங்குகிறது. சாட்டுதல் முதல் திருவிழா வரை தினமும் இரவு பண்டார பெட்டி புறப்பாடு நடக்கும். பரம்பரை அறங்காவலர்கள் ஏற்பாட்டினை செய்துவருகின்றனர்.