வாடிப்பட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :1391 days ago
வாடிப்பட்டி, வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் ஐயப்பன் கோயிலில் 35வது மண்டல பூஜை நடந்தது. காலை சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஐயப்பன் புலி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குருநாதர்கள், நிர்வாக குழு மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.