பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தில் இரண்டாம் நாள் விழா நடந்தது.
இதன் படி பகல் பத்து உற்சவத்தில் ஆழ்வார்களின் பிரபந்தங்கள் முழுவதுமாக பெருமாள் முன்பு பாராயணம் செய்யப்படுகிறது. அப்போது சுந்தரராஜ பெருமாள், சவுந்தர வள்ளி தாயார் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பிரபந்தங்கள் வாசிக்கப் பட்ட பின், பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் காலை 10:45 மணிக்கு தினமும் தீர்த்த பிரசாதம் வழங்குதல், சடாரி சாதிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. பகல் பத்து உற்சவத்தில் திருமங்கையாழ்வார் பாசுரம் வாசிக்கப்பட்டு, திருமொழித் திருநாள் நடக்கிறது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி நாளான, ஜன., 2 ல் பரமபத வாசல் வழியாக பெருமாள் அருள் பாலிக்க உள்ளார். அன்று தொடங்கி ராப்பத்து உற்சவத்தில் கடைசி நாளில் நம்மாழ்வார் மோட்சம் நடக்கும். ஏற்பாடுகளை பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.