தத்வமஸி ஐயப்ப பக்தர்கள் நடத்திய மண்டல பூஜை
ADDED :986 days ago
கோவை : கோவை, சக்தி கார்டன் மற்றும் பிரைம் அவென்யூ பொதுமக்கள் மற்றும் தத்வமஸி ஐயப்ப பக்தர்கள் இணைந்து 4 ஆம் ஆண்டு மண்டல பூஜையை கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடத்தினர். இதில் சுவாமி அய்யப்பனுக்கு அஷ்டாபிஷேகம், மற்றும் புஷ்பாஞ்சலி நடந்தது. இந்த நிகழ்வை சபரிமலை முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ எழி கோடு சசி நம்பூதிரி நடத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.