திருவண்ணாமலை மஹா தீபம் ஏற்றிய மலையில் பிராயசித்த அபிஷேக பூஜை
ADDED :1027 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றிய மலை உச்சியில், பிராயசித்த அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடந்தது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் கடந்த, 6ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலை ஏறி சென்று மஹா தீபத்தை வழிபட்டனர்.
பக்தர்கள் மலை மீது ஏறியதற்கு, பிராயசித்த பரிகார பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை அமைத்து பூஜை செய்தனர். அதன் கலச நீரை மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி திருப்பாதத்துக்கு அபிஷேகம் செய்து, பிராயசித்த சிறப்பு பூஜை நடத்தினர்.