மண்டல பூஜை சங்காபிஷேகம்
ADDED :1020 days ago
வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் மகரஜோதி ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 52ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக தும்மலக்குண்டு ரோடு பால்கேணி மேட்டில் இருந்து ஊர்வலமாக தீர்த்த குடங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் 100 சங்கு, தேங்காய், எலுமிச்சை, தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். கோயிலில் திருப்பணி நடந்து வருவதால் ஆண்டுதோறும் நடக்கும் கஜ, கோ, யாக சாலை பூஜைகள் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.