பழநி படிப்பாதையில் சூடம்: பக்தர்கள் அவதி
ADDED :1092 days ago
பழநி: பழநி மலைகோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் சூடம் ஏற்றுவதால் பாதையாத்திரை பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். பழநி மலைக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சிலர் படிப்பாதையில் தொடர்ந்து சூடம் ஏற்றி சென்று செல்வதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் நடைபெறுகிறது. மலைக்கோயில் இரட்டை விநாயகர் கோயில் அருகே முதல் படியில் கற்பூரங்கள் வைத்து எரிப்பதால் அப்பகுதியை கடக்கும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். இது குறித்து முறையான விழிப்புணர்வு பக்தர்களுக்கு ஏற்பட வேண்டும். படிப்பாதை பூஜை செய்வது எனில் திருநீறு, குங்குமம், சந்தனம், பூக்கள் வைத்து வழிபட வேண்டும். படிகளில் கற்பூரம் ஏற்றிச் செல்வது பாதையில் தொடர்ந்து அவர்களுக்கு பின்னால் வரும் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.