காளஹஸ்தி சிவன் கோயிலில் ஸ்ரீலங்கா அமைச்சர் தரிசனம்
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஸ்ரீலங்கா நாட்டின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஸ்ரீ பிரசன்ன ரணதுங்கா குடும்பத்தா ரோடு இன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்தவர்களை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சாமி தரிசனம் செய்வதற்கு முன்னதாக சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர் .தொடர்ந்து சாமி அம்மையார்களை மூலவர் சன்னதியில் தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர் கோயில் படத்தையும் சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.