விருதுநகர் வேளாங்கண்ணி ஆலயதிருவிழா கொடியேற்றம்
ADDED :4894 days ago
விருதுநகர் : விருதுநகர் துலுக்கபட்டி, ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார்கள் திவ்யானந்தம், பிரிட்டோ சுரேஷ், ஸ்டீபன் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. "நம்பிக்கையின் நட்சத்திரம் அன்னை மரியா என்ற தøப்பில் மறையுரையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாலை நவநாள் திருப்பலியும் மறையுரையும் நடைபெறுகிறது. செப்.,8ல் திருத்தங்கல் பாதிரியார் ஞான பிரகாசம் தலைமையில், வேளாங்கண்ணி அன்னையின், தேர்பவனி நடைபெறுகிறது.