உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வே.பாளைத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

வே.பாளைத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்

வேலாயுதம்பாளைம்: வேலாயுதம்பாளைத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 19ம் தேதி வெகுசிறப்பாக நடக்கவுள்ளது. இதையொட்டி விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலை தயாரித்து வரும், கதிர்வேல் கூறியதாவது:மூன்று தலைமுறையாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியை செய்து வருகிறோம். இரண்டடி அடி உயர விநாயகர் சிலை முதல் ஏழு அடி வரை விநாயகர் சிலை வரை தயாரிக்கப்படுகிறது. செல்வ விநாயகர், ராஜகணபதி, வரசித்தி விநாயகர் கன்னி மூலகணபதி, ஆசீர்வாத பிள்ளையார், யானை, சிங்கம், காமதேனு பின்னணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், வீடுகளில் நிரந்தரமாக வைத்து வழிபடும் வகையில் ஒரு அடி உயர விநாயகர் சிலைகள், குறைந்த விலையில் பல்வேறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !