பூத நாராயண பெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1343 days ago
திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேதராய் பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.