கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஆண்டிபட்டி: ஜம்பலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலி நரசிங்க பெருமாள் மூலவராகவும் செங்கமலத்தாயார், பன்னிரு ஆழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனி தனி சன்னதிகள் உண்டு. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கதலி நரசிங்க பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பவனி வந்து ஆழ்வாருக்கு மோட்சம் தரும் நிகழ்ச்சி நடந்தது. சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் வழியாக பவனி வந்த பெருமாளை வழிபட்டனர். மண்டகப்படி பூஜைகள் நடந்தது. விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.