போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
ADDED :1027 days ago
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, நேற்று அதிகாலை நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஸ்ரீதேவி, பூமியை தேவியுடன் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல நவரத்தினங்களால் ஆன ரத்தின அங்கி சேவைக்கான அலங்காரத்திலும், மலர் அலங்காரத்தில் இருந்த மூலவர் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார்.