சபரிமலை வெடிவழிபாட்டில் விபத்து 3 ஊழியர்கள் படுகாயம்
ADDED :1020 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாளிகைபுரம் கோயிலில் பக்தர்களின் வேண்டுகோளின்படி நேர்த்திகடனாக வெடிவழிபாடு நடத்தப்படுகிறது. மாலை 5 மணி அளவில் மாளிகைபுரம் அன்னதான மண்டபத்திற்கு பின்புறம் வெடி வழிபாட்டிற்காக குப்பிகளில் மருந்து வைக்கும் போது திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வெடிவழிபாடு ஊழியர்கள் செங்கானூரை சேர்ந்த ஜெயக்குமார் 47, ரெஜிஸ்ரி 35, அமல் 28 ஆகியோர் படுகாயமுற்றனர். இவர்கள் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து சன்னிதானம் போலீசார் விசாரிக்கின்றனர்.