உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதுல்யநாதீஸ்வரர் கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு சந்தனகாப்பு

அதுல்யநாதீஸ்வரர் கோவிலில் மகாவிஷ்ணுவிற்கு சந்தனகாப்பு

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது.

சைவ ஸ்தலங்களில் பெருமாள் வழிபாடும் சேர்ந்திருக்கும். வைணவமும், சைவமும் ஒன்றே என்பதை இது உணர்த்தும். அந்த வகையில் அரகண்டநல்லூர் அதுல்யநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இவருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. பரணிதர குருக்கள் ஏற்பாட்டில், பக்தர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !