உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன., 6ல் கோலாகலம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜன., 6ல் கோலாகலம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 6ல் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிக்க உள்ளார். ராமேஸ்வரம் திருக்கோயிலில் நடக்கவுள்ள ஆருத்ரா தரிசன விழா யொட்டி தினமும் பல்லாக்கில் மாணிக்கவாசகர் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருகிறார். ஜன.,6ல் நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் எழுந்தருளியதும் நடராஜர் சுவாமிகள் ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிக்க உள்ளார். இவ்விழாவுக்காக கடந்த சில நாட்களாக நடராஜர் சுன்னதியில் வெட்டி வேரில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !