உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்.4ல் மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா

பிப்.4ல் மதுரை மீனாட்சி கோயில் தெப்பத்திருவிழா

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜன.24ல் நடக்கிறது. பிப்.4 வரை நடக்கும் இத்திருவிழாவில் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் பஞ்சமூர்த்திகளுடன்  தினமும் காலை, மாலை சித்திரை வீதிகளில் வீதி உலா வருவர்.

தைப்பூசத்தன்று பிப்.4ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று காலை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி இருமுறை குளத்தைச் சுற்றி வருவர்.  அன்றிரவு 8:00 மணிக்கு ஒருமுறை சுற்றி வருவர். அன்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். ஆயிரங்கால் மண்டபத்தை மட்டும் பார்க்க வடக்கு கோபுரம்  வழியாக காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !