அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டு தோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதைபோல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கும், அம்பாளுக்கும், பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர், கரும்புச்சாறு,விபூதி, கலசாபிஷேகம், வில்வபொடி,மாவுப்பொடி, குங்குமம், நெல்லி, திருமஞ்சாரம், பஞ்சாமிர்தம், பழச்சாறு என பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். அதனைதொடர்ந்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.