பரமக்குடியில் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதார தினம்
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடன கோபால நாயகி சுவாமிகளின் அவதார தின விழா நடந்தது.
இக் கோயிலில் நாயகி சுவாமிகள் தனிச் சன்னதி உள்ளது. இவர் பெருமாளை அடைவதற்கு ஒரே வழி நாயகி உருவம் தான் என்பதை உணர்ந்து, தன்னை பெண்ணாக பாவித்து தலையில் கொண்டை சூடி பெருமாளின் கீர்த்தனைகளை பாடி இறைவன் திருவடியை அடைந்துள்ளார். இவர் பிறந்த மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று ஒவ்வொரு ஆண்டும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் 11:00 மணிக்கு உற்சவர் பாகவதர்களின் பஜனை கோஷ்டியுடன் வீதி வலம் வந்தார். மாலை 6:90 மணிக்கு சவுராஷ்ட்ர ஸ்ரீ மதிகள் மற்றும் மாதர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் கைங்கர்ய சமாஜத்தினர் செய்திருந்தனர்.