உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

சின்னாளபட்டி அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

சின்னாளபட்டி: திருவாதிரையை முன்னிட்டு பித்தளைப்பட்டி அபிதகுஜாம்பிகை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. உற்சவர் நடராஜருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. திருவாதிரை களி, 16 வகை காய்கறிகளின் கூட்டு நைவேத்தியம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை ஆராதனை நடந்தது.

* சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !