அன்னூர் ஐயப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி அலங்காரம்
ADDED :1033 days ago
அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில் நேற்று ஐயப்பன் புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னூர் ஐயப்பன் கோவிலில், கடந்த கார்த்திகை 1ம் தேதி முதல் 52 நாட்களாக 1200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை சென்றுள்ளனர். தொடர்ந்து தினமும் 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து வருகின்றனர். நேற்று இக்கோவிலில் சபரிமலையில் செய்வது போல், துளசி, ரோஜா, மஞ்சள் சாமந்தி, செவ்வந்தி என 16 கிலோ எடையுள்ள நான்கு வகையான மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டது. இதை எடுத்து சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.