உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி முத்துக்குமாரசாமி கோவிலில் பொங்கல் விழா

அவிநாசி முத்துக்குமாரசாமி கோவிலில் பொங்கல் விழா

அவிநாசி: சேவூரில், முத்துக்குமாரசுவாமி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேவூரில் உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு ஆண்டுதோறும் ஜீவசமாதி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையடுத்து தினசரி சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசாமிக்கும். முசாபரி தோட்டத்தில் அமைந்துள்ள அவரது ஜீவசமாதியிலும் இருவேலையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோவிலில் பொங்கல் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.அதனைத் தொடர்ந்து சாமிக்கு பால் தயிர், தேன், பஞ்சாமிர்தம். இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முத்துக்குமாரசாமி ஜீவசமாதியில் பக்தர்கள் அலகு குத்தி ராஜவீதி, கோபி ரோடு,வடக்கு வீதி வழியாக திருவீதி உலா வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவீதி உலாவில், தாமரைக்குளம் தங்கராஜ் குழுவினர் பத்ரகாளியம்மன், கருப்பராயன் வேடமணிந்து ஆடி வந்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !