கோவை ஃபாரின் விநாயகர் கோயிலில் அகத்திய மகரிஷி குருபூஜை
ADDED :1021 days ago
கோவை: கோவையில் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் போஸ்ட். எல்.ராமசாமி நகர் பகுதியில் உள்ளது ஃபாரின் விநாயகர் கோவில். இங்கு கோவில் வளாகத்தில் ஸ்ரீஅகத்திய மகரிஷி, ஸ்ரீ கோமாதா, ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ நந்தி, ஸ்ரீ ஐஸ்வரேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு அகத்திய மகரிஷி குருபூஜை நாளை 9ம் தேதி மாலை 6.30 மணி முதல் 8.15 மணிவரை நடைபெற விருக்கிறது. விழாவில், அபிஷேகம் , அலங்கார பூஜைகள் , மஹா தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் பக்தர்களுக்கு குடும்ப சுபிட்சத்திற்காக பூஜையில் வைக்கப்பட்ட ருத்திராட்சம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருக்கோவில் பக்தர்கள் செய்துள்ளனர்.